வெறும் வயிற்றில் தினம் ஒரு கிளாஸ் ஏலக்காய் தண்ணீர்.. உடலினுள் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

 

நீண்ட நாள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நாம் உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். நாம் எப்படி சாப்பிடுகிறோமோ, அப்படி தான் நமது உடல் ஆரோக்கியமும் இருக்கும். குறிப்பாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் உணவுகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வெறும் வயிற்றில் சத்தான உணவுப்பொருட்களை உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.

நம் வீட்டு சமைலறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஏலக்காய். இந்த ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும், ஃப்ளேவரையும் கொடுப்பது மட்டுமின்றி, செரிமானத்திற்கும் நல்லது. இப்படிப்பட்ட ஏலக்காய் பாரம்பரியமாக நாட்டு மருத்துவத்தில் ஒருசில பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன.

ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்தது: 

ஏலக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் இருப்பதால் இது நமது உடலில் உள்ள சரும செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக சண்டை போடுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் பொதுவாக மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் டல்லான சருமத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைகிறது. ஏலக்காய் தண்ணீர் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து சண்டையிடுவதால் உங்களுக்கு இளமையான சருமம் கிடைக்கும்.

உடலை சுத்தம் செய்கிறது: 

ஏலக்காய் தண்ணீர் உங்கள் தோலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றுகிறது. இது இயற்கையான டீடாக்சிஃபையராக செயல்பட்டு ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து கசடுகளையும் வெளியேற்றுகிறது. முகப்பரு அல்லது கறைகளை ஏற்படுத்தும் இந்த நச்சுகள் வெளியேற்றப்படுவதால் உங்களுக்கு தெளிவான சருமம் கிடைக்கும்.

ரத்த ஓட்டம்: 

ஏலக்காய் தண்ணீர் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டம் என்பது நமது உடலின் அனைத்து உறுப்புகள் அதிலும் குறிப்பாக தோலுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது. சரும செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால் அது சிறப்பாக வேலை செய்யும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்களுடைய சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயமாக ஏலக்காய் தண்ணீர் பருகுங்கள்.

வீக்க எதிர்ப்பு பண்புகள்: 

சிவத்தல், முகப்பரு போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது வீக்கம். ஏலக்காயில் உள்ள வலுவான வீக்க எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து சரும பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் எக்ஸிமா அல்லது ரோசேசியா போன்ற சரும நோய்களுக்கும் ஏலக்காய் தண்ணீர் தீர்வாக அமைகிறது.

முகப்பருக்களை கட்டுப்படுத்துகிறது: 

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியின் காரணமாக முகப்பருக்கள் ஏற்படலாம். ஏலக்காய் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. எனவே எண்ணெய் சருமம் அல்லது அடிக்கடி முகப்பரு ஏற்படும் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் தண்ணீரை குடித்து வர நிச்சயமாக அதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.

கொலாஜன் உற்பத்தி: 

சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருப்பதற்கு பெயர் போனது கொலாஜன். நமக்கு வயதாகும் பொழுது கொலாஜன் உற்பத்தி குறைகிறது. இதனால் நமக்கு மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுகிறது. ஏலக்காய் நீரில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

வடுக்கள் மற்றும் பிக்மென்டேஷன்: 

பருக்கள் ஏற்படுவதை தவிர்ப்பது ஒருபுறம் இருந்தாலும், அதே நேரத்தில் பருக்களால் ஏற்படும் வடுக்கள் மற்றும் ஹைப்பர்பிக்மென்டேஷன் பிரச்சனையையும் ஏலக்காய் தண்ணீர் சரி செய்கிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஏலக்காய் சருமத்தை ஆற்றி புதிய செல்கள் உருவாவதற்கு உதவுகிறது. மேலும் கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை விரைவாக போக்குகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது: 

செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியமாகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மோசமான செரிமானம் காரணமாக வயிற்று உப்புசம், வீக்கம் மற்றும் முகப்பரு போன்றவை ஏற்படலாம். ஏலக்காய் தண்ணீர் செரிமானத்தை சீராக நடக்க செய்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ஏலக்காய் தண்ணீர் குடிப்பதன் மூலமாக உங்களுக்கு அழகு கூடுவதோடு மட்டுமல்லாமல் சீரான செரிமானத்தையும் பெறலாம்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)