வெயிட்லாஸுக்கு உதவும்  சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. எப்படினு தெரிஞ்சிக்கோங்க! 

 

பொதுவாக கிழங்கு வகைகளை சாப்பிட்டால் வெயிட் போடும், வாயுத்தொல்லையை உண்டாக்கும் என்று சொல்லியே அதனை ஒதுக்கிவிடுவோம். எக்கச்சக்கமான மருத்துவ குணங்களை தன்னுள்ளே ஒளித்துக்கொண்டு இனிப்பாய் இனிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள். சர்க்கரைவள்ளி கிழங்கில், வைட்டமின்கள் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

உடல் பருமன்: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு நார்ச்சத்து நிறைந்த காய்கறி. இது உங்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. அதோடு, கலோரிகளின் அளவு மிகவும் குறைவு. இது பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கலாம். மேலும்,  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலின் கூடுதல் கொழுப்பை எரிக்க (Weight Loss Tips) உதவுகிறது.

இதய ஆரோக்கியம்: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட இது, கொல்ஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை குறைக்கலாம்.

சர்க்கரை நோய்: 

சர்க்க்ரை வள்ளிக் கிழங்கு சுவையில்  இனிப்பாக இருந்தாலும், இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள், இனிப்பு உணவு சாப்பிட விரும்பினால், இது பாதுகாப்பன தேர்வாக இருக்கும் எனலாம்.

புற்றுநோய்: 

பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் காணப்படுகின்றன. கரோட்டினாய்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் நிறைந்துள்ளன. இவை இரண்டும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

கண் பார்வை கூர்மை:  

வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு காரட்டிற்கு இணையாக கண் பார்வையை கூர்மை படுத்தி, கண் நோய்கள் ஏதும் வராமல் தடுத்து பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. எனவே, நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, பருவகால நோய்களுக்கு நாம் உடனடியாக பாதிக்கப்படலாம். 

சர்க்கரை வள்ளிக் கிழங்கை உட்கொள்ளும் முறை: 

வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுட்டு சாப்பிடுவதும், அதன் மருத்துவ குணங்களை அதிகரித்துக் கொடுக்கும்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)