தினமும் ஒரு அத்திப்பழம்.. சுகர் முதல் இரத்த அழுத்தம் வரை நிவாரணம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

 

வித்தியாசமான தோற்றத்துடனும், நிறத்துடனும் காட்சியளிக்கும் ஒரு பழம் தான் அத்திப்பழம். இந்தப் பழம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கிடைக்கும் ஒரு சீசன் பழமாகும். இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்காவிட்டாலும், அதன் உலர்ந்த வடிவம் ஆண்டு முழுவதும் கிடைக்கும். எந்த வடிவத்தில் இவற்றை உட்கொண்டாலும், அவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

இதில் அதிகப்படியான இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே இருப்பதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை தரும். உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும். உடல் எடை அதிகரிக்க விரும்புவோர், தினமும் 2 அத்திப்பழத்தை சாப்பிட்டால், இரத்த உற்பத்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான வளர்ச்சியையும் தரும்.

மலச்சிக்கல் நீங்கும்

நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அத்திப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் அத்திப்பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதுவும் கடுமையான மலச்சிக்கலில் அவதிப்படும் போது, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2-3 அத்திப்பழத்தை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எடை இழப்பு

உலர்ந்த அத்திப்பழம் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். ஏனெனில் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இதை 2-3 துண்டுகள் சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். இதன் விளைவாக உண்ணும் உணவுகளின் அளவு குறைந்து, உடல் எடை குறையும்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்

தற்போது இரத்த அழுத்த பிரச்சனையை நிறைய பேர் கொண்டுள்ளனர். இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது நாளடைவில் மாரடைப்பை வரவழைத்துவிடும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள், அதைக் கட்டுப்பாட்டில் வைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த பொட்டாசியம் அத்திப்பழத்தில் உள்ளன. எனவே அத்திப்பழத்தை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

எலும்புகள் மற்றும் தசைகள் வலு சேர்க்கும்

அவ்வப்போது அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நமது எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

செரிமான ஆரோக்கியம் மேம்படும்

அத்திப்பழத்தில் ப்ரீபயோடிக்குகள் அதிகமாக உள்ளன. ப்ரீபயோடிக்குகள் புரோபயோடிக்குகளின் செயல்பாட்டிற்கு ஆதரவளித்து, செரிமான செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் அத்திப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற உதவிபுரியும்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் அத்திப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உணவு செரிமானம் ஆகும் நேரத்தை இது அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிக மெதுவாக உடலினால் கிரகிக்கப்படுகிறது. எனவே உடனடியாக ரத்தத்தின் சர்க்கரை அளவானது அதிகரிக்கும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது. ஆனால் காய்ந்த அத்திப்பழங்களில் அதிக அளவு சர்க்கரை நிறைந்துள்ளதால் அவற்றை மிகச் சிறிதளவே உட்கொள்ள வேண்டும்.

கருவளத்திற்கு நல்லது

பண்டைய கிரேக்க காலத்திலிருந்தே அத்திப்பழங்கள், கருவுறுதலின் அடையாளமாக கருதப்பட்டது. அத்திப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து பெண்களின் முழு அண்டவிடுப்பின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை உட்கொள்ளும் போது கருவளம் மேம்படும். அதுவும் ஆண்கள் அத்திப்பழத்தை சாப்பிடும் போது, அவர்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் மேம்பட்டு, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க உதவி புரிவதோடு, இதயத்தில் கொடுக்கப்படும் அழுத்தமும் குறையும். இதன் விளைவாக இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். ஆகவே இதய பிரச்சனை வரக்கூடாதெனில், அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)