கொலஸ்ட்ரால் குறைக்கும் மருதம் பட்டை டீ.. நன்மைகளை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 

மருத மரம் என்பது தெருவோரங்களில் நாம் பெரும்பாலும் காணக்கூடிய ஒரு மரமாகும். ஆனால் ஆயுர்வேதத்தில் இந்த மரத்தின் பட்டை ஒரு மிகச் சிறந்த மூலிகையாக அறியப்படுவது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆயுர்வேதத்தின்படி, மருதம்பட்டை கொண்டு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதன் மருத்துவ குணத்தைக் கருதி, இந்த பட்டையை பொடியாக்கி பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்ற பாதிப்புகளுக்கு மருதம்பட்டை நல்ல பலன் தருவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மூலிகை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

மருத மரத்தின் பட்டையில் பல்வேறு சிறப்பு கூறுகள் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு சிறந்த நன்மை அளிக்கிறது. அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த பட்டையில் கார்பொக்சிலிக் அமிலம், ட்ரைஹைடிராக்சி ட்ரைடெர்பின் , எல்லஜிக் அமிலம் மற்றும் பீட்டா சிட்டோஸ்டெரால் போன்ற சில வகை குறிப்பிட்ட அமிலங்கள் உள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக இந்த பட்டை பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த அமிலங்களின் பலவகைகள் உங்கள் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே மருதம்பட்டை சரும நன்மைகளுக்காக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பட்டையை ஆயுர்வேதத்தில் மற்றும் இதர ஆர்கானிக் பொருட்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு:

மருதம் பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால், தமனியில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கவும் உடலில் நல்ல கொலட்ஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை இயற்கையாகவே குறைத்து லிப்பிட் ப்ரொஃபைலை (lipid profile) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ரத்த அழுத்த கட்டுப்பாடு:

உங்கள் ரத்த அழுத்த அளவை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க மருத மரப்பட்டை உதவியாக இருக்கிறது. ரத்த நாளங்களை தளர்வாக்கவும், ரத்த ஓட்ட எதிர்ப்பை குறைக்கவும் மருதம் பட்டை உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.

இதய செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது:

இதய செயல்பாட்டை மேம்படுத்துவதோடு இதயத்திலிருந்து வேறு உறுப்புகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் திறனை அதிகப்படுத்த உதவியாக இருக்கிறது மருதம் பட்டை. மேலும் கரோனரி தமனி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி ஆஞ்சினா (மார்பு வலி) போன்ற நிலைமை ஏற்படாமல் உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

மருதம் பட்டையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய நலனிற்கு சிறந்த நன்மையைத் தருகிறது. இது உங்கள் இருதய அமைப்பில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.