உங்கள் இதயம் வேகமாக துடிக்கிறதா..? இரும்புச் சத்துக் குறைபாடு தான் காரணம்!

 

ஒவ்வொரு ஊட்டசத்தும் நம் உடலுக்கு இன்றியமையாதது. எல்லா ஊட்டசத்து அளவுகளும் உடலில் சரியாக இருக்கும்போது, எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே, ஊட்டசத்து குறைபாடுகள் ஏற்பட்டால், அது உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இரும்பு சத்து குறைவாக இருந்தால், உடலில் ஏற்படும் முக்கிய பிரச்சனை என்ன தெரியுமா? அது எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி தெரியுமா? ஆம். இது உங்களுக்கு இரத்த சோகையை ஏற்படுத்தும். இரத்த சோகை தானே என்று நீங்கள் அலட்சியமாக இருக்க கூடாது. ஏனெனில், இது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தால் பெண்களின் ஹீமோகுளோபின் அளவு எப்போதும் குறைவாகவே காட்டுகிறது. இது பெண்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே உடல் ஆற்றல் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இரும்பு சத்து மிகவும் அடிப்படையான தேவை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும். சரி... உங்களுக்கு இரும்புச் சத்து போதுமான அளவில் இருக்கிறதா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்.

உடல் சோர்வு: 

இது மிகவும் பொதுவான அறிகுறியாகும். உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருக்கும். எந்தவேலையையும் செய்யத் தோன்றாமல் சோர்வுடனே இருப்பீர்கள். நீங்கள் செய்ய வேண்டும் என்று முற்பட்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளாகும்.

வெளிர் சருமம்: 

உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கிறது அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றாலும் இரும்புச் சத்துக் குறைபாடேக் காரணம். இப்படி வாயின் உள்பக்கம் இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுகிறதெனில் இரும்புச் சத்துக் குறைபாடே காரணம்.

மூச்சுத் திணறல்: 

இதுவரை இல்லாதது போல் படிகட்டு ஏறினால் மூச்சு வாங்குதல், நடந்தால் மூச்சு வாங்குதல் என கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது எனில் சாதாரணமாக இருக்காதீர்கள். அதுவும் இரும்புச் சத்துக் குறைபாடின் அறிகுறிதான்.

இதயத் துடிப்பு அதிகரித்தல்: 

வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகிறது என்றால் அதற்கு இரும்புச் சத்துக் குறைபாடுதான் காரணம். ஏனெனில் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்யும். எனவே இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

கால் மரத்துபோதல்: 

ஒரு இடத்தில் நிலையாக அமர்ந்திருத்தால் உடனே கால் மரத்து போகும். கால்கள் ஷாக் அடித்ததைப் போல் உணர்வீர்கள். அப்படி நீங்கள் அடிக்கடி உணர்கிறீர்கள் எனில் அது சாதாரண விஷயமல்ல. இரும்புச் சத்து போதுமான அளவு இல்லை என்பதே காரணம்.