தினமும் காலையில் பீட்ரூட் சாறு குடிச்சா.. உங்க உடலுக்குள்ள இந்த அற்புதங்கள் எல்லாம் நடக்குமாம்!

 

இரத்த கலரில் சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும் காய்கறி பீட்ரூட். பெரும்பலான மக்கள் விரும்பி சாப்பிடும் வேர் காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. இதை நீங்கள் சாறு வடிவில் உட்கொள்ளும்போது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். பீட்ரூட் சாறு உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சிறந்த பானங்களில் ஒன்றாகும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவற்றின் நன்மைகள் நிறைந்த பீட்ரூட் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் உடலுக்கு அதிசயங்களை செய்கிறது. அவை பீட்டாலைன்களிலும் ஏராளமாக உள்ளன.

இதய ஆரோக்கியம்:

இயற்கை முறையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பீட்ரூட் ஜூஸ் பெரிதும் உதவுகிறது. இந்த பீட்ரூட் ஜூஸில் நைட்ரேடுகள் உள்ளன. இது நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றது. இந்த நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை தளர்த்தவும், அதனை விரிவு படுத்தவும் மற்றும் நம் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது. நம் தினசரி உணவில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் இது மாரடைப்பு இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.

செயல்திறன் அதிகரிக்கும்:

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சோம்பேறியாக மாறிவிட்டோம். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினால் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவது நல்லது. இந்த பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேடுகள் நம் உடலில் உள்ள தசைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் நம் உடலில் உள்ள தசை சோர்வு குறைந்து உடற்பயிற்சி செயல்திறன் மேம்பட அதிக அளவு உதவி செய்கிறது.

மூளை ஆரோக்கியம்:

நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இந்த பீட்ரூட் ஜூஸில் நிறைந்துள்ளது. பீட்ரூட் ஜூஸில் உள்ள இயற்கை நைட்ரேடுகள் நம் இதய அமைப்புக்கு மட்டும் பயன் தராமல் மூளையின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இந்த பீட்ரூட் ஜூஸ் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த ஓட்டம் சீராக அமைய உதவுகிறது. இதன் மூலம் நினைவாற்றல் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்துகிறது. உங்கள் தினசரி உணவில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு வயதாகும் போது கூட கூர்மையான நினைவாற்றல் சக்தி இருக்கும்.

அழற்சி எதிர்ப்பு:

இந்த பீட்ரூட் ஜூஸில் பீட்டாலைன்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்ற அழற்சி எதிர்ப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த இயற்கை அமிலங்கள் நம் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுவதன் மூலம், உடல் முழுவதும் உள்ள வீக்கத்தை குறைக்க செய்யும். இதனால் நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களின் அபாயம் குறையும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

சரும ஆரோக்கியம்:

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்திற்கு தினசரி பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம். இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் வயதான அறிகுறிகளை குறைக்கவும் தெளிவான நிறத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது. உங்கள் தினசரி உணவில் பீட்ரூட் ஜூஸை சேர்த்துக் கொண்டு வந்தால் உங்கள் சருமம் இயற்கையான முறையில் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)