முடி அசுர வேகத்தில் வளர வேண்டுமா? இந்த 2 எண்ணெய் போதும்.. இப்படி செஞ்சி யூஸ் பண்ணுங்க

 

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில், முடி பராமரிப்புக்காக இயற்கையான பொருட்களை (Natural Ingredients) பயன்படுத்துவதே சிறந்தது. இந்நிலையில் நீங்களும் நீளமான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற விரும்பினால் கடுகு எண்ணெய் (Musturd Oil), பாதாம் எண்ணெய் (Almond Oil) மற்றும் வெந்தயத்தை (Fenugreek Seeds) பயன்படுத்தலாம். இந்த மூலிகை எண்ணெய் கூந்தலில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஒரு மேஜிக் எண்ணெய் ஆகும்.

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, ரோஸ்மேரி இலைகள், வெந்தய விதைகள், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய்

செயல்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கழுகு எண்ணெயை போட்டு அதை நன்கு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், இதில் கருவேப்பிலை, ரோஸ்மேரி இலைகள், வெந்தய விதைகள், சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை ஒன்றாக போட்டு சேர்க்கவும். இதன் பிறகு இந்த எண்ணெயின் நிறம் சற்று கருமையாக மாறும்போது கேஸை ஆஃப் செய்யவும், பிறகு சிறிது நேரம் இந்த எண்ணெயை ஆறவிடவும். எண்ணெ நன்கு ஆறியப் பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணெயை நீங்கள் வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால், மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

இந்த மேஜிக் எண்ணெயின் நன்மைகள் என்ன?

கடுகு எண்ணெயில் ஆல்ஃபா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கூந்தலை சீரமைக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் உதவும். அதே நேரத்தில் வெந்தய விதைகள் மற்றும் ரோஸ்மரி இலைகளை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவும். இதன் காரணமாக கூந்தல் வேகமாக வளர ஆரம்பிக்கும். ஏனெனில் வெந்தய விதைகளில் புரதம் அதிகமாக உள்ளதால் இது வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. மறுபுறம் கறிவேப்பிலையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதில் உள்ள புரதம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உங்கள் கூந்தலை பளபளப்பாகவும், முடியின் வேர்களை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)