உடல் எடையை மளமளவென குறைக்கனுமா..? இந்த 4 மேஜிக் உணவுகளை சாப்பிடுங்க போதும்... உடனே குறையும்

 

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, அது சவாலான பணி. உடல் பருமானால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவை சரியாக எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் எடை சரியாக பராமரிக்கப்படும். 

பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள். ஆனால், உணவு கட்டுப்பாடும் இதில் மிக அவசியமாகும். உங்கள் உணவைக் கட்டுப்படுத்தாமல், ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால், எடை இழப்புக்கு நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கையான எளிய வழிகள் பற்றி உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறியுள்ளார். அதை பற்றி இங்கே காணலாம்.

சூப்

இந்தியாவில், நாம் திரவ உணவுகளைக் காட்டிலும் திட உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். இதன் காரணமாக உணவின் செரிமானம் தாமதமாகிறது. இதனால் எடை அதிகரிக்கிறது. இதற்கு பதிலாக, முடிந்தவரை அதிகமாக சூப் (Soup) குடிக்கவும். இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கும். மேலும் செரிமானமும் நன்றாக இருக்கும். இதில் காய்கள், மூலிகைகள், மசாலாக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

முள்ளங்கி

முள்ளங்கி பொதுவாக குளிர்காலத்தில் வளர்க்கப்படும் ஒரு தாவரமாகும். இந்த பருவத்தில், மனித உடல் செயல்பாடு குறைகிறது. இதனால் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. ஆகையால், இந்த காலத்தில் முள்ளங்கியை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள கலோரிகளின் அளவு குறைவு. மேலும், இது கொழுப்பை அதிகரிக்காது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு 

சர்க்கரைவள்ளிக்கிழங்கு நிலத்தில் விளையும் ஒரு சிறந்த வேர் காயாகும். இதை தினமும் சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும். இதனால் பசி எடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இது தவிர, சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. இதன் காரணமாக எடை இழப்பில் உதவி கிடைக்கின்றது.

சிட்ரஸ் உணவுகள்

எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் டேன்ஜரைன்கள் போன்ற சிட்ரஸ் உணவுகள் (Citrus Foods) பொதுவாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உட்கொள்ளப்படுகின்றன. வைட்டமின் சி பெற இவை உண்ணப்படுகின்றன. இவை எடை இழப்பிலும் அதிக பங்கு வகிக்கின்றன.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)