உடல் எடையை மளமளவென குறைக்கனுமா..? அப்ப காலையில் இந்த சூப்பர் பானங்களை குடிங்க!

 

உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, அது சவாலான பணி. உடல் பருமானால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமான உணவை சரியாக எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் எடை சரியாக பராமரிக்கப்படும். 

பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். உடல் எடையை பல எளிய, இயற்கையான வழிகளிலும் கட்டுப்படுத்தலாம். காலையில் குடிக்கும் சில பானங்கள் இதில் நமக்கு உதவும். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான காலை நேர பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

தண்ணீர்:

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உள்ளது. காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பது செரிமானத்தை சீராக்கி, கொழுப்பை கரைத்து, கலோரிகளையும் வேகமாக எரிக்க உதவும். மேலும் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும், ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றது. 

கிரீன் டீ:

கிரீன் டீ என்பது பலர் காலையில் குடிக்கும் ஒரு பிரபலமான பானமாக மாறி வருகிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு கலவைகள் அதிகமாக உள்ளன. கிரீன் டீ மூலம் வளர்சிதை மாற்றம் மேம்படுகின்றது. இது தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது. 

எலுமிச்சை நீர்:

உடல் எடையை குறைக்க மிகச்சிறந்த பானங்களில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் மிக முக்கியமானது. இது தயாரிக்கவும் மிக எளிதானது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகின்றது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தி பல செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது. 

சுரைக்காய் சாறு:

இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செரிமான அமைப்பையும் சீராக்குகிறது. காலையில் சுரைக்காய் சாறு குடிப்பது உடல் எடையை குறைப்பதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கின்றது.

சோம்பு நீர்:

சோம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன. இவை மூன்றும் உடல் எடையை குறைக்க மிகவும் அவசியம். இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், இதன் நீரை உட்கொண்டால் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. உடல் எடையை குறைக்க தினமும் இதை காலையில் குடிக்கலாம். 

கற்றாழை சாறு:

கற்றாழை சாறு எடை இழப்புக்கு மிக பிரபலமான காலை பானமாக உள்ளது. கற்றாழை சாறில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை அதிகமாக உள்ளன. இது கொழுப்பை வேகமாக எரித்து வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. கற்றாழையில் உள்ள பண்புகள் இதில் உள்ள நச்சுகளை நீக்க உதவும்.

 

இலவங்கப்பட்டை டீ:

இலவங்கப்பட்டை நம் நாட்டில் மிக பிரபலனான மசாலாவாக உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும், கூடுதல் கலோரிகளை அகற்றவும் உதவுகின்றது. வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சில நாட்களில் உடல் எடை குறையும். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகின்றது. 

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)