உங்க தொப்பை கொழுப்பை குறைக்கனுமா.. இந்த 5 டீ பானங்கள் குடிங்க!

 

உலகில் பெரும்பாலானோருக்கு உடல் எடையைக் குறைப்பது முதன்மையான நோக்கமாக உள்ளது. ஏனெனில் அந்த அளவில் உடல் பருமனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தாலும், அனைவராலுமே டயட்டுகளை பின்பற்ற முடியாது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளில் ஒன்று உடல் எடையை குறைக்கும் போது டீ குடிக்கலாமா? என்பது தான். நீங்கள் குடிக்கும் தேநீரை பொறுத்து இதற்கான பதில் மாறுபடும். அதாவது பிளாக் டீ, கிரீன் டீ போன்ற ஆரோக்கியமான மூலிகைகள், மருந்து பொருட்கள் நிறைந்த தேநீரை அருந்துவது உடல் எடையை குறைக்க உதவும்.

எனவே உங்களுக்கு பிடித்த சூடான பானத்தை நீங்கள் கைவிட வேண்டாம். மூலிகை தேநீர் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களைத் தடுக்கவும் உதவும். உங்கள் தொப்பையை குறைக்க உதவும் தேநீர் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

க்ரீன் டீ : 

க்ரீன் டீயில் ஃபிளாவனாய்டுகள், கேட்டசின்கள், அமினோ அமிலங்கள், பாலிஃபீனால்கள் மற்றும் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கிரீன் டீ அருந்துவது வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. Molecules என்ற சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், கிரீன் டீ உடல் எடை மற்றும் இடுப்பு பகுதி சதையை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இலவங்கப்பட்டை தேநீர் : 

இலவங்கப்பட்டை நறுமணப் பொருள் என்பதையும் மீறி ஏகப்பட்ட உடல் நல நன்மைகளை தரக் கூடியதும் கூட. ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இலவங்கப்பட்டை செய்கிறது. இந்த இலவங்கப்பட்டை கொண்டு தயார் செய்யப்படும் தேநீர் உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடான மருத்துவ ஊட்டச்சத்து ESPEN இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இலவங்கப்பட்டை தேநீர் கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது, இதனால் உங்கள் தொப்பை விரைவாக குறைந்துவிடும்.

ஊலாங் தேநீர் : 

ஊலாங் தேநீர் என்பது பாரம்பரிய சீன தேநீர் ஆகும். இது உடல் கொழுப்பை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் துணை புரிகிறது, மேலும் இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. சீன ஜர்னல் ஆஃப் இன்டகிரேடிவ் மெடிசின் ஆய்வில், ஊலாங் தேநீரை ஆறு வாரங்களுக்கு குடிப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் முடியும் என்று கண்டறிந்துள்ளது. யூரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், ஊலாங் டீ குடிப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மஞ்சள் தேநீர் : 

மஞ்சள் தேநீர் புதிதாக இருக்கிறதா? ஆம் மஞ்சள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள குர்குமின் எனப்படும் நன்மை பயக்கும் கலவை கொழுப்பை எரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது தொப்பை பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவுகிறது. தேவையான அளவு மஞ்சள் தூள் எடுத்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். தண்ணீர் வற்றியதும் தேவைப்பட்டால் புதினா, தேன் கலந்து அருந்தலாம்.

இஞ்சி தேநீர் : 

இஞ்சி தேநீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் அதிக ஆற்றலை எரிக்க உடலை தூண்டுகிறது. மேலும் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி தேநீர் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உங்கள் வயிற்றை மெலிதாக மாற்றும். உடலில் வெப்பத்தை உருவாக்கும் செயல்முறையான தெர்மோஜெனீசிஸை இஞ்சி அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை இஞ்சி தேநீரை அருந்துங்கள்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)