முட்டை ரொம்ப பிடிக்குமா..? அளவிற்கு அதிகமான முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

 

பூமியின் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாக முட்டை உள்ளது. ஒவ்வொரு முட்டையிலும் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இது புரதத்தின் முழுமையான மூலமாகும், இதில் வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இவை ஒன்றாக நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நாட்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

முட்டையில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு இருப்பதால் ஒரு நாளில் அதிக முட்டைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுவதில்லை. இதுதவிர முட்டைகள் பல வயிறு தொடர்பான பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான முட்டை சாப்பிடுவது எப்போது ஆபத்துதான். எந்த சிக்கலையும் தவிர்க்க முட்டையின் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம்

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கலாம், முட்டையில் புரதச்சத்து நிறைந்திருப்பதே இதற்குக் காரணம். அளவுக்கு அதிகமான புரதம், சிறுநீரகத்தை பாதிக்கும் (Kidney Health). எனவே உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், நீங்கள் முட்டைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம்

புரதச்சத்து காரணமாக அதிகம் இருப்பதன் முட்டையை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். முட்டைகள் கொழுப்பை குறைக்க உதவுகின்றன என்றாலும், அவற்றை அதிகமாக உட்கொள்வது கொழுப்பை சேர்த்து உடல் பருமன் ஏற்பட காரணமாகலாம். அதிக அளவிலான முட்டை உட்கொள்வதினால், நீங்கள் உட்கொள்ளும் கலோரி அதிகரிப்பதும் இதற்கு காரணம்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயம்

ஒரு முட்டையில் சுமார் 180 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஒரு நாளைக்கு ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டை சாப்பிடுவதால் பாதிப்பு ஏதும் இருக்காது. ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கு மேல் உட்கொள்வதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கலாம். உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே, முட்டையை அளவாக மட்டுமே உட்கொள்ள வேண்டும். 

செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் 

முட்டைகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதினால் செரிமான ஆரோக்கியம் சீர்குலையும். அதிக முட்டைகளை சாப்பிடுவது வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கு நேர்மாறாக சில சமயங்களில் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், வயிற்றில் எரிச்சல் மற்றும் வாயு பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் இருக்கலாம்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)