உடம்பில் மேஜிக் செய்யும் கிராம்பு.. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க!
நம் வீட்டின் சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் கிராம்பு. இந்த கிராம்பு சமையலில் உணவிற்கு நல்ல மணத்தை தருவதோடு, உடலில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. ஆயுர்வேதத்தில் கிராம்பு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பல் வலி, தொண்டை வலி, வயிற்று கோளாறுகளுக்கு கிராம்பு ஒரு நிவாரண பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உருவத்தில் சிறியதாக இருக்கும் கிராம்பு, காரச் சுவையைக் கொண்டது. கிராம்பில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள யூஜினோல் என்னும் பொருள், மன அழுத்தம், வயிற்று பிரச்சனைகள், பர்கின்சன் நோய், உடல் வலி மற்றும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறது. இது தவிர கிராம்பில், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தயமின், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாமல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக, நீங்கள் தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கிராம்புகளை மென்று சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் வந்த பிறகு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் எந்த வகையான தொற்றுநோயையும் தவிர்க்க முடியும், மாறிவரும் வானிலை, மழை மற்றும் குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் கிராம்புகளை மென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கல்லீரல் பாதுகாப்பு
கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு. ஏனெனில் அது பல செயல்பாடுகளைச் செய்கிறது. உணவு செரிமானம் முதல் இதயம் செயல்பாடு, முளை இயக்கம் என அனைத்துக்கும் அடிப்படை காரணியாகவும் திகழ்வது கல்லீரல் தான். எனவே இந்த உறுப்பின் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். தன்னை தானே சுவீகரித்துக் கொள்ளும் இயல்புடையது கல்லீரல் என்றாலும், கொழுப்பு அதற்கு எதிரி. கல்லீரலே உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பை சுரக்கிறது என்றாலும், உண்ணும் உணவு மூலம் உருவாகும் கெட்ட கொழுப்பு கல்லீரல் இயக்கத்தை பாதித்து அதன் செயல்பாட்டை மோசமாக்குகிறது. இதனை தவிர்க்க உணவு முறையில் அதீத கவனம் செலுத்த வேண்டும். கிராம்பு சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
வாய் துர்நாற்றம் போகும்
கிராம்பு ஒரு இயற்கையான வாய் ப்ரெஷ்னராக பயன்படுத்தப்படலாம், சில சமயங்களில் வாயை சுத்தம் செய்யாததால், வாய் துர்நாற்றம் வர ஆரம்பிக்கிறது, இதன் காரணமாக சுற்றி இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, தினமும் காலையில் அதை மென்று சாப்பிட்டால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து சுவாசம் புத்துணர்ச்சி பெறும்.
பல்வலி
பல் வலிக்கு சிறந்த நிவாரணி கிராம்பு. சிலர் பல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். இது ஆரோக்கியமான உடலுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தை நாடுவது சிறந்தது. அதாவது வீட்டின் சமையலறையில் இருக்கும் கிராம்புகளை எடுத்து சாப்பிட்டாலே பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். பல் வலிக்கும்போது உடனடியாக ஒரு கிராம்பு துண்டை எடுத்து வலிக்கும் பல் மீது வைத்து அழுத்தவும். இது உடனே பல் வலிக்கு காரணமான கெட்ட பாக்டீரியாவை திறம்பட தாக்கி அழிக்க தொடங்கும். இதனால் பல்வலி குணமாகும்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)