சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் பூகேட் தீவு.. எங்கு இருக்கு தெரியுமா?
இந்தியர்கள் பலர் வெளிநாட்டு சுற்றுலா என்று வரும்போது முதலில் தேர்வு செய்வது தென் கிழக்கு ஆசிய நாடுகள்தான். ஏனென்றால் இங்கு இந்தியாவை போன்ற சூழலும், குறைந்த செலவு, இயற்கை அழகு, சிறந்த தங்கும் வசதி போன்ற அனைத்தும் கிடைக்கின்றன.
இந்த சுற்றுலா பட்டியலில் முன்னை நாடுகளில் ஒரு நாடாக இருப்பது தாய்லாந்து ஆகும். இங்கு இந்தியாவை போன்றே இயற்கை சூழலும் இயற்கை அழகும் நிறைந்துள்ளது. இந்தியர்கள் பலர் கேளிக்கை நிகழ்வுகளுக்காகவே தாய்லாந்து செல்கிறார்கள். இங்கு அதை தவிர வேறு சிறப்பு விஷயங்களும் உள்ளன. அந்த விவரங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் உள்ள பூகேட் தீவு குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக உள்ளூர் மக்கள் எண்ணிக்கையில், தனிநபரோடு ஒப்பிட்டால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 118ஆக இருக்கிறதாம். அதாவது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விகிதம் 1:118 ஆக உள்ளது.
நாம் வாழும் பூமியிலேயே மிக அழகான கடற்கரைகள் இந்த பூகேட் தீவில் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட கோடா மற்றும் கரோன் ஆகிய கடற்கரைகள் மிகவும் ரம்மியமானவை. இந்த தீவில் சுமார் 90 மைல் தொலைவுக்கு கடற்கரைகள் உள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களை பூகேட் தீவு கொடுக்கும். எண்ணற்ற நீர் விளையாட்டுகள் இங்கு உள்ளன. செய்திகளில் நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய பட்டாயா தீவைக் காட்டிலும் பூகேட் தீவில்தான் மக்கள் கூட்டம் அதிகம். மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் பட்டாயா இரண்டாம் இடத்தில் உள்ளது.