உங்க சுகர் அளவை சர்ருனு குறைக்கும் 3 இலைகள்.. என்ன இலைகள் தெரியுமா?

 
Diabetes

உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் வேகத்தைப் பார்க்கும் போது இன்னும் சில ஆண்டுகளில் சர்க்கரை நோய் இல்லாதவர்களை காண்பது என்பது முடியாத ஒன்றாகிவிடும் போல் உள்ளது. NCBI-ன் அறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயால் இதயம், இரத்த அழுத்தம், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, உலகில் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனுடன், நீரிழிவு நோயால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

diabetes

தற்போது, சுமார் 8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மதிப்பீடுகளின்படி, 2045-ம் ஆண்டில், இந்தியாவில் 13 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள். அதனால்தான் இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோய் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோயாகும்.

ஆனால் வாழ்க்கை முறையை சரிசெய்தால், இரத்த சர்க்கரையை அதிலிருந்து அகற்றலாம். என்.சி.பி.ஐயின் சமீபத்திய ஆய்வின்படி சில மருத்துவ குணங்கள் கொண்ட இலைகளை மென்று சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மூன்று இலைகள் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாம்.

கற்றாழை இலைகள்:

இந்தியாவில் உள்ள யாருக்கும் கற்றாழை தெரியாமல் இருக்காது. கற்றாழை மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமான செடியாக கருதப்படுகிறது.அமெரிக்காவில் உள்ள NCBI (National Center for Biotechnology Information ) ஆய்வின்படி கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதாகவும், இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் எனவும் கண்டறிந்துள்ளனர்.கற்றாழை இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தானாகவே கட்டுப்படுத்தும்.

சீதாப்பழம் இலைகள்:

சீதாப்பழம் மிகவும் சுவையான ஒரு பழமாகும். NCBI-ன் ஆய்வின் படி சீதாப்பழ இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.சீதா இலைகள் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனுடன் இரத்த சர்க்கரையையும் குறைக்கிறது.

வேப்பிலை:

வேப்பிலை பொதுவாக பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக மக்களால் அறியப்படுகிறது.ஆனால் வேப்பிலை நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும் என்று NCBI-யின் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. கணையம் தன் வேலையைச் சரியாக செய்யும் .இதன் காரணமாக இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் வேப்ப இலைகளில் இதுபோன்ற பல பண்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)