உப்புமாவில் விஷம் கலந்து மனைவி கொலை.. விசாரணைக்கு பயந்து பொறியாளர் தற்கொலை!!

 

கன்னியாகுமரியில் மனைவியை கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அடுத்துள்ள வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின் (34). பொறியாளரான இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தனது மனைவி திவ்யா சில்வெஸ்டருக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் சிறை சென்ற இவர் பிணையில் வந்து தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

மனைவியை கொன்ற வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அன்றைய தினம் காலை வெகு நேரமாகியும் பெல்லார்மின் வீட்டின் அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் சந்தேகமடைந்தனர். 

பின்னர் அறை ககதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் மின் விசிரியில் தூக்கிட்ட படி தொங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தக்கலை காவல் நிலைத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தக்கலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பெல்லார்மின் மனைவி திவ்யா சில்வெஸ்டரை ஆன்லைனில் விஷம் வாங்கி உப்புமாவில் கலந்து கொடுத்த கொலை செய்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்த நிலையில் வழக்கில் தந்தை பெர்மான்ஸ், தாய் அமலோற்பம் ஆகியோர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தது. 

இதனால் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.