இன்னும் 39 தோட்டாக்கள் உள்ளது.. ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்.. பகீர் சம்பவம்!
உத்தரபிரதேசத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் சுமித் சிங். ஆசிரியரான இவரிடம் மாணவர்கள் பயிற்சி வகுப்பு படித்து வருகின்றனர். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் இப்பயிற்சி வகுப்பில் படித்து வந்துள்ளார். அப்போது அந்த மாணவர் மாணவியிடம் பேசுவதை ஆசிரியர் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சகோதரனை அழைத்து வந்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் அந்த மாணவனும் பயிற்சி வகுப்பு முடித்து விட்டு வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழித்து அம்மாணவரும் அவரது சகோதரரும் மீண்டும் பயிற்சி மையத்திற்கு வந்து ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் எடுத்து வந்த துப்பாக்கியை வெளியே எடுத்து ஆசிரியரை சுட்டுள்ளனர். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில், “6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். 40 குண்டுகளை உன் உடலில் பாய்ச்சுவேன். இன்றும் 39 குண்டுகள் உள்ளது” என அவர்கள் மிரட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கந்தௌலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்ய போலீசார் குழுக்களை திரட்டியுள்ளதாக டிசிபி சோனம் குமார் தெரிவித்தார்.