சொந்த மகளையே கர்ப்பமாகிய தந்தை.. திண்டுக்கல் அருகே அதிர்ச்சி!

 
வடமதுரை அருகே 13 வயது மகளை தந்தையே கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே 27 வயது பெண் ஒருவர், தனது கணவர் இறந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (33) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது 2 மகள்கள் மற்றும் கணவருடன் கல்லாத்துப்பட்டியில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் அந்தப்பெண் வேலைக்கு சென்றபோது, சுரேஷ்குமார் தனது மனைவியின் 13 வயதான மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி அந்த சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

 

அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருந்து கரு கலைந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல அலுவலர் சியாமளா என்பவர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் தந்தை சுரேஷ்குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் சுரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.