சமூகத்தளத்தில் அவதூறு! சேலம் நபர் கைது!!

 

சமூகத்தளத்தில்  முதலமைச்சர் மீது அவதூறாக பதிவு செய்த சேலத்தை சார்ந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமூகவலைதளத்தில் மிக கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பதிவுகள் பகிர்ந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீப காலங்களில் சமூகத்தளங்களில் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு பரப்பும் செயல் அதிகரித்து வருகிறது, குற்றவாளிகள் மீது போலீசாரின் உடனடி நடவடிக்கையும் அதிகரித்துள்ளது.