மது போதையில் செக்ஸ் டார்ச்சர்.. கணவனை அடித்து கொலை செய்த மனைவி.. பரபரப்பு வாக்குமூலம்!

 

தர்மபுரி அருகே செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா (40). கூலி தொழிலாளி இவரது மனைவி கனகா (34). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜா கடந்த 1-ம் தேதி வீட்டின் அருகில் உள்ள வரட்டாறு கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இயற்கையாக இறந்ததாக நினைத்து, போலீசாருக்கு தெரியாமல், ராஜாவின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் தாய் ராதாமணி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரூர் போலீசார் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவரது மனைவி கனகாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனது கனவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில் எனது கணவர் கூலி தொழில் செய்து வருகிறார். தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்வார். சம்பவத்தன்று இரவில் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்தார், பின்னர் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார் எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினேன், அதை பொருட்படுத்தாமல் அவரது ஆசைக்கு இணங்க என்னை வற்புறுத்தினார்.

நான் குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தேன். பின்னர் அவர் குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்து தகாத வார்த்தையால் திட்டி என்னை அடித்து துன்புறுத்தினார். நானும் எனது தற்காப்புக்காக அவரை தாக்கினேன் அதில் அவர் மயக்கம் அடைந்து விட்டார் என எண்ணி நான் கதவை தாளிட்டு உறங்கச் சென்று விட்டேன்.

மீண்டும் எழுந்து வந்து பார்த்த பொழுது எனது கணவர் அங்கேயே இருந்தார். அவரை நான் தட்டி எழுப்பியபோது இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடவை யாருக்கும் தெரியாமல் ஓடையில் வைத்து விட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.