பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்.. காதலன் உள்பட 5 பேர் கைது.. தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்!
தஞ்சாவூரில் 17 வயது பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ் (21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 12வது படித்து வரும் 17 வயது பள்ளி சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இவர், கடந்த 19ம் தேதி தனது காதலியான அந்த மாணவியை, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் காதலன் அபினேஷின் நண்பர்களான பாபநாசத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), ஸ்ரீதரன்(24), திருவாரூரை சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய 3 பேர் சென்றனர். பின்னர் காதலன் உட்பட 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அரவிந்தன், மற்ற 3 பேரும் கூட்டு பலாத்காரம் செய்த போது தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். பின்னர் இந்த வீடியோவை அவரது நண்பரான பூண்டியை சேர்ந்த ராகுல் (எ) குட்டி (24) என்பவரது செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ராகுல், மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சைல்டு லைன் 1098-க்கு வந்த தகவலின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார், மாணவியிடம் விசாரணை நடத்திபோக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அபினேஷ், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அரவிந்தன், ராகுல் (எ) குட்டி ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.