பழிக்குப் பழி? நெல்லையில் பயங்கரம்!!

 

பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராக பைக்கில் வந்த மாயாண்டி இளைஞரை காரை வைத்து மோதி கீழே விழவைத்துள்ளனர். பின்னர் காரிலிருந்து இறங்கியவர்கள்  மாயாண்டியை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கை மணிக்கட்டு வெட்டுப்பட்டுள்ளது. கால் துண்டாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மாயாண்டி. கொலையாளி கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. கீழநத்தம் வார்டு உறுப்பினர் கொலைக்கு பழிக்குப் பழியா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.

நீதிமன்ற வாசலிலேயே கொலை நடந்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.