காதல் விவகாரம்.. 17 வயது சிறுமியை ஏர் கன்னால் சுட்ட காதலன்.. நத்தம் அருகே பரபரப்பு
நத்தம் அருகே காதல் விவகாரத்தில் ஏர்-கன்னால் காதலன் சுட்டதில் 17 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற இளைஞர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் செல்லத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக்கூறி சிறுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது செல்லம் அவரது சித்தப்பா வீட்டில் இருந்த ஏர்-கன் மூலம் சுட்டதில் சிறுமி படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து செல்லமும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இருவரும் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் காதலியை ஏர் கன்னால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.