கணவரின் அக்காள் மகனுடன் உல்லாசம்.. பெண் கழுத்தை அறுத்து கொடூரக்கொலை.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்

 

கிருஷ்ணகிரி அருகே கணவரின் அக்காள் மகனுடன் கள்ள உறவு வைத்திருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் ரோடு சின்னமுத்தூர் அருகே உள்ளது மேட்டு கொல்ல கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு திருப்பதி (18), கேசவன் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். பழனியின் அக்காள் மகன் தர்மபுரி மாவட்டம் குண்டாங்காட்டைச் சேர்ந்த மாரியப்பன் (25). இவர் அந்த பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவர் பழனியின் வீட்டில் தங்கி இருந்தார்.

அவருக்கும், சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. இதை அறிந்த பழனி மற்றும் அவருடைய மகன்கள், சத்யாவை கண்டித்தனர். ஆனாலும் சத்யா கள்ளக்காதலை கைவிடவில்லை. நேற்று காலை பழனி, வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மகன்களும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் சத்யா இருந்தார். சத்யாவின் வீட்டில் இருந்து நேற்று பிற்பகல் அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

அங்கு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சத்யா பிணமாக கிடந்தார். அருகில் மாரியப்பன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயத்துடன் கிடந்த மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பழனி மற்றும் அவரது மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் மாரியப்பன் சத்யாவின் வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் வீட்டுக்கு வந்த சத்யாவின் மகன்களோ, கணவனோ சத்யாவை கொலை செய்து விட்டு அவருடைய கள்ளக்காதலனின் கழுத்தை அறுத்தார்களா? அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் கொலையாளி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.