பாயசத்தில் விஷம் கொடுத்து சிறுமி கொலை.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!
போடி அருகே பாயசம்த்தில் விஷம் கொடுத்து சிறுமியை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு சௌந்தர்யா (11) என்ற மகள் இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ராம்குமார் சுரேஷ் என்பவருக்கு ரூ. 4.7 லடசம் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை சுரேஷிடம் திருப்பிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். அதன்படி, சுரேஷ் தனது நண்பர் விஜி என்பவருடன் சேர்ந்து பாயசத்தில் விஷம் கலந்து ராம்குமார் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார்.
இதைக் குடித்த ராம்குமார், செல்வி, சிறுமி சௌந்தர்யா சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிறுமி சௌந்தர்யா பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தந்தை ராம்குமார் மற்றும் தாய் செல்வி ஆகியோர் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விஜி மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பாயசத்தில் விஷம் கலந்து கொடுத்த சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளர். மேலும் கொலை செய்ய உதவிய விஜி என்ற விஜயாரம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.