கல்லூரி மொட்டை மாடியில் உல்லாசம்... வெளியான வீடியோவால் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

 

கர்நாடகாவில் கல்லூரி மொட்டை மாடியில் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் விரக்தியில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். விடுமுறை தினங்களில் செல்போனில் பேசவும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவனும், மாணவியும் கல்லூரியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு யாருக்கும் தெரியாமல் இருவரும் நெருக்கமாகி உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே தான் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது.

அதாவது மாணவனும், மாணவியும் கல்லூரி மாடியில் சேர்ந்து இருந்ததை அருகே உள்ள கட்டடத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இருப்பதும், அந்த வீடியோ தான் வலைதளங்களில் பரவி வருவதும் தெரியவந்தது. இதனை கல்லூரியில் உள்ள பிற மாணவ - மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் குறிப்பிட்ட அந்த மாணவனும், மாணவியும் மனம் உடைந்து போயினர். இதற்கிடையே அவமானத்தில் அந்த மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த மாணவனும் தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் மாணவனும், மாணவியும் சேர்ந்து இருந்த வீடியோ வெளியானதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினரும் தெரிந்து கொண்டனர்.

இதையடுத்து குடும்பத்தினர் சார்பில் தனித்தனியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடியோ எடுத்தது யார்?, சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாவணகரேயில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.