இந்தப் படத்திற்கு எதற்காக ஏ சான்றிதழ்?

 

இந்தப் படத்திற்கு எதற்காக A சான்றிதழ் என்று புரியவில்லை. என்னைக் கேட்டால் உங்கள் பிள்ளைகளையும் இந்தப் படத்துக்கு அழைத்துச் செல்லலாம்.

முதலாளித்துவம் பற்றியும், தொழிலாளர்கள் எவ்வாறு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள் என்பதைப் பற்றியும், நீடித்துக் கொண்டிருக்கும் சாதிய பாகுபாட்டைப் பற்றியும், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன மாதிரியான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, அட்லீஸ்ட் அவற்றைப் பற்றிய கேள்விகளும் சிந்தனைகளுமாவது  எழக்கூடும். நிச்சயம் அடுத்தத் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம் விடுதலை 2.

- சசிகலா