விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு ஏன் வரவில்லை? மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி!
விஜயகாந்த்தின் இறப்பிற்கு நடிகர் வடிவேலு வராத காரணம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு நடிகர் மன்சூர் அலிகான் பதில் அளித்துள்ளார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த 28-ம் தேதி காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நேற்று முன்தினம் பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இரவு 7 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் முதல் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை நடிகர் மன்சூர் அலிகான் அவரின் அருகிலேயே இருந்தார். இதுகுறித்த விடியோக்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இரண்டு மூன்று வருடங்களாக உடல் ரீதியாக மிகுந்த துயரத்தை அனுபவித்த அவர் இறைவனடி சேர்ந்தது நல்ல விஷயமாகத்தான் அனைத்து மக்களும் ஆத்மார்த்தமாக நினைத்திருப்பார்கள். அந்த வகையில் தான் நானும் சென்று அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன்” என்று கூறினார்.