ஜவான் படத்தில் விஜய்..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி இயக்குநர் அட்லீ..!
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜவான்’ படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக வெளியான தகவல் குறித்து இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘ஜவான்’. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் இன்று (செப். 7) உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தியேட்டர்களில் சிறுவர்கள் முதல் தாத்தா பாட்டி வரை என அனைவரும் எழுந்து நின்று ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுவரை பாலிவுட் பார்க்காத அளவுக்கு தியேட்டர் செலிபரேஷனை ஷாருக்கான் ரசிகர்கள் மரண மாஸாக கொண்டாடி வருகின்றனர். ஜவான் திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் 4 ஸ்டார் ரேட்டிங் மற்றும் 4.5 ஸ்டார் ரேட்டிங்குகள் கிடைத்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படத்தையே ஜவான் திரைப்படம் ஓரங்கட்டி விடும் என அனைவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் பரவின. இது சம்மந்தமாக இப்போது பேசியுள்ள இயக்குனர் அட்லி, “இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை. ஆனால் நான் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.