விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது க்ரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பரபரப்பு புகார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இதை தவிர சில படங்களை தயாரித்துள்ளார் நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயனதாராவை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இவர்கள் சமீபத்தில் தங்களது இரட்டை குழந்தைகளுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது அவர்களது உறவினர்கள் திருச்சி மாவட்டம், லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதாவது, லால்குடியில் உள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் மற்றும் கோயம்பத்தூரில் வசித்து வரும் குஞ்சிதபாதம் அவரது மனைவி சரோஜா ஆகியோர் புகார் மனு கொடுக்க வந்துள்ளனர்.

அப்போது குஞ்சிதபாதம் கூறியதாவது, தனக்கு உடல்நிலை சரியில்லை. இதயத்தில் நான்கு அடைப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சை பெற வேண்டும். இது குறித்து லால்குடியில் வசித்து வரும் தனது அண்ணன் மாணிக்கத்திடம் உதவி கேட்டேன். தங்களது சொத்தில் வில்லங்கம் உள்ளதால் சொத்தை விற்று கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.