திரையுலகில் தொடரும் சோகம்! பிரபல மலையாள நடிகர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75.

1972-ல் வெளியான ‘நிர்தசாலா’ படித்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இன்னொசென்ட். 50 ஆண்டு திரைபட வாழ்வில், அக்கரே நின்னொரு மாறன், காந்திநகர் 2வது தெரு, உன்னிகளே ஒரு கதை பாராயம், நாடோடிக்காட்டு, முகுந்தெட்ட சுமித்ரா விளக்குன்னு, வடக்குநோக்கியந்திரம், ராம்ஜி ராவ் பேசும், பெருவண்ணபுரத்தே காட்சிகள், மகிழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சிகள் உட்பட 750-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘லேசா லேசா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ள இன்னொசென்ட், மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இன்னொசென்ட் கடந்த 2012-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இருப்பினும், 2015-ம் ஆண்டில், நடிகர் அவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டதாக அறிவித்தார். புற்றுநோய் வார்டில் சிரிப்பு என்ற தலைப்பில் அவர் நோயுடன் நடந்த போரை விவரித்தார்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இன்னொசென்ட் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்னொசென்ட் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துமனை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் காலமானார். இன்னசென்ட்டுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவரது உடல் எர்ணாகுளம் கடவந்திரா ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 3.30 மணி வரை இரிங்காலக்குடா முனிசிபல் டவுன்ஹாலிலும் பின்னர் அவரது இல்லத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டும். மாலை 5 மணிக்கு செயின்ட் தாமஸ் கதீட்ரல் தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.