இது உண்மையான அன்பு.. தம்பி தங்கச்சிகளுக்கு சூரியின் உருக்கமான பதிவு
May 20, 2025, 18:32 IST
நடிகர் சூரியின் நடிப்பில் வெளியாகியுள்ள மாமன் திரைப்படம் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. கதையின் நாயகனாக மட்டுமல்லாமல் கதையின் ஆசிரியராகவும் இந்தப் படத்தின் கதையையும் எழுதியுள்ளார் சூரி.
கோவையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற சூரி மாணவ மாணவியரின் வரவேற்புற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
”என் அன்பான தங்கச்சீங்களும் தம்பீங்களும், நீங்க குடுத்த அன்பும் நம்பிக்கையும் தான் — நான் சம்பாதிச்ச பெரிய பொக்கிஷம். மாமன் படத்துக்கு நீங்க குடுத்த ஒவ்வொரு like, comment, share-ம் எனக்கு சொல்ல முடியாத motivation-ஆ இருக்கு! உண்மையிலே இது support இல்ல, இது உங்க pure love தான்” என்று எக்ஸ் தளத்தில் நிகழ்ச்சியில் பேசிய காணொலியுடன் பதிவிட்டுள்ளார்