இவதான் என் பொண்டாடி.. விஜய் டிவி பிரபலத்தின் திருமணம்.. வைரல் வீடியோ!

 

விஜய் டிவி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயனின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று வருகிறார். வத்திக்குச்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நாஞ்சில் விஜயன் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நாஞ்சில் விஜயன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தனது அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை காட்டாமல் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.

A post shared by Vinod Kumar Chandrasekaran (@vividvinood)

இந்த நிலையில் இந்த நிலையில் நாஞ்சில் விஜயனுக்கும் மரியா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவரது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைபெற்றிருந்தது. இவரது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் ஒரு சிலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.