ஊரெங்கும் சாய் பல்லவி பத்தி தான் பேச்சு! என்ன பண்ணுனாங்கன்னு தெரியுமா?
நேற்று முதல் சமூக ஊடகங்களில் சாய் பல்லவியை கொண்டாடி வருகிறார்கள் நெட்டிசன்கள். அப்படி என்னத்தை செய்தார் சாய் பல்லவி என்று தெரியுமா?
இந்தியில் தயாராகி வரும் ராமாயணம் திரைப்படத்தில் சாய்பல்ல்வி சீதையாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதால் மாமிச உணவை அறவே தவிர்த்து விட்டதாகவும் , காய்கறி உணவு வகைகளை சமைப்பதற்காக உடன் ஒரு சமையல்காரரை அழைத்துச் செல்கிறார் என்றும் தமிழ்நாட்டின் பழம்பெரும் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதைக் கண்டிக்கும் வகையில், இது வரை என்னைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்திகளை நான் கண்டு கொண்டதில்லை. ஆனால் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இனிமேல் நான் சட்ட ரீதியாகத் தான் பதிலளிப்பேன் என்று கடுமையான கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் சாய் பல்லவி.
சாய்பல்லவியின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பெரும்பான்மையானோர் சாய்பல்லவிக்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன், குறிப்பிட்ட இதழை உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தி வெளியிட்டுள்ளதாகச் சாடியும் வருகின்றனர்.