தொடரும் சோகம்.. பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் மரணம்.. அதிர்ச்சியில் திரைத்துறை!

 

பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மாரடைப்பால் இன்று காலமானார் அவருக்கு வயது 82.

1966-ல் வெளியான ‘ரங்குலா ரத்னம்’ என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் சந்திரமோகன். தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் கிட்டத்தட்டட 932-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழில் வெளியான ‘நாளை நமதே’ படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்திருந்தார். அதேபோல ‘நீயா’ படத்திலும் கமலின் நண்பனாக நடித்திருந்தார்.

இவர், 2 நந்தி விருதையும், 1987-ம் ஆண்டு சந்தமாமா ராவே விருதை அதானொக்கடே படத்திற்காக பெற்றார். மேலும் படஹரெல்லா வயசு படத்திற்காக பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். இவர் கடைசியாக ஆக்ஸிஷன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் சந்திரமோகன் மாரடைப்பு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த நடிகரின் இழப்புக்கு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சந்திரமோகன் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பல தசாப்தங்களாக திரைப்படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தைப் பெற்ற சந்திரமோகனின் அகால மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

அதே போல, நடிகர் சாய் தேஜ் தரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவரது மறக்கமுடியாத நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களால் ஒவ்வொரு முறையும் நம் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துகிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சந்திரமோகன் சார். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.