‘உறவெல்லாம் ஒன்றாக..விழியெல்லாம் தேனாக’ கோட் படத்தின் 2வது பாடல் வெளியானது

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான் மற்றும இஸ்தான்புல் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கேரளாவில் நடைபெற்றது. தற்போது, இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த பின்பு படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் புரோமோஷனும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

முன்னதாக விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் நடனத்தில் ‘விசில் போடு’ பார்ட்டி பாடலாக யுவன் இசையில் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தப் பாடல் பெரிதாக வரவேற்பு பெறாமல் போனது. இதனால், இரண்டாவது பாடலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்த நிலையில், இன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

<a href=https://youtube.com/embed/4P_k0rqmyX8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4P_k0rqmyX8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த நிலையில் தற்போது ‘கோட்’ படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சின்ன சின்ன கண்கள் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.