அடுத்த ஷாக்.. தமிழ் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் புகார்.. மலையாள நடிகை ரேவதி பரபரப்பு புகார்!
நடிகர் ரியாஸ் கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா துறையில் பாலியல் தொல்லை, அட்ஜெட்ஸ்ட்மெண்ட் தொடர்பான புகார்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. வாய்ப்பு வழங்குவதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நடிகைகள் அழைக்கப்படுவதாக பல நடிகைகள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர்.
இந்நிலையில் தான் நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி சித்திக் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரேவதி சித்திக் கூறுகையில், “போட்டோகிராபர் ஒருவர் மூலம் எனது செல்போன் எண்ணை ரியாஸ் கான் வாங்கி உள்ளார். அதன்பிறகு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொண்டார். அதற்கு மறுத்ததால் தனக்கு அவரது தோழிகளை அறிமுகம் செய்து வைக்கும்படி கேட்டு கொண்டார். செல்போனில் அவர் ஆபாசமாக பேசி உள்ளார்.” என்றார்.
மேலும் சித்திக் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ரேவதி சம்பத் கூறுகையில், “சித்திக்கை திரைத்துறையில் இருந்தே ஓரம் கட்ட வேண்டும். கேரள அரசு பாதுகாப்பு அளித்தால் சித்திக்கிற்கு எதிராக புகார் அளிக்க முன்வருவேன். கேரளா திரையுலகில் பாலியல் தொல்லையால் நடிகைகள் பாதிக்கப்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.