உங்கள லீட் பண்ண போறது புது லீடர்.. மிரட்டலாக வெளியானது GOAT பட டிரெய்லர்!

 

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘கோட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜயின் 68வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அப்படத்தில் இருந்து ‘விசில் போடு’, ‘ஸ்பார்க்’ உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், கோட் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ‘கோட்’ படத்தின் டிரெய்லர் இன்று (ஆக. 17) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் டிரெய்லர் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

<a href=https://youtube.com/embed/jxCRlebiebw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/jxCRlebiebw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக இது டைம் டிராவல் கதை என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 2004ல் நடந்த ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் விஜய்யின் கோட் பட கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.