மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘வணங்கான்’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்.. பாலா ரசிகர்களுக்கு ட்ரீட்!

 

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகினார். அதன் பின்னர் படப்பிடிப்பும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படியான நிலையில் சில பல காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்தார். 

இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. 

ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த 'வணங்கான்'படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

<a href=https://youtube.com/embed/Qh36JHw8auo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Qh36JHw8auo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில் இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த டிரெய்லரை பார்க்கும்போது செய்யாத கொலைக்காக அருண் விஜயை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அதன்பின் அந்த கொலைப் பழியில் இருந்து தான் நிரபராதி என்பதை அருண் விஜய் எப்படி நிரூபிக்கிறார் என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் போல் தெரிகிறது. மேலும் இந்த டிரெய்லரின் இறுதியில் இப்படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.