நீதிபதியை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை... பிரபல காமெடி நடிகர் அதிரடி கைது!

 

நகைச்சுவை நடிகர் ஜெயமணியை கிண்டி போலீசார் திடீரென கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் ஜெயமணி. ஆரம்பத்தில் இவர் அரசு வேலையில் தான் பணியாற்றியிருந்தார். பின் நடிப்பின் மீது இருந்த பணியாற்றியிருந்தார். சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சாது என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் இவர் வடிவேலும் உடன் இணைந்து பல இவர் நடித்து இருக்கிறார். இருவரின் நடிப்பில் வரும் காமெடிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அதோடு இவரை சினிமா திரையில் தூக்கி விட்டது லக்கிமேன் படத்தில் தான்.

தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 18-ம் தேதி நடிகர் ஜெயமணியும் அவரது நண்பர் மாரிமுத்துவும் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் பூங்காவில் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவரும், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் 7வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுமான திருமால் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். இந்த வேளையில் நடிகர் ஜெயமணி, தனது நண்பர் மாரிமுத்துவுடன் சேர்ந்து நீதிபதி திருமாலை திட்டியுள்ளனர். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதோடு அவர்கள் மாஜிஸ்திரேட் நீதிபதி திருமாலை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாஜிஸ்திரேட் திருமால் சார்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது மொத்தம் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 341 (சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்), 294 (பி) ( ஆபாசமாக திட்டுதல்), 506 (1) (மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து ஜெயமணி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோரை கிண்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் அனைத்தும் காவல் நிலைய ஜாமீனுக்கு உட்பட்டதாகும். இதையடுத்து ஜெயமணி மற்றும் அவரது நண்பரை காவல் நிலைய ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.