ஒட்டுமொத்தமாக திரண்டு வந்த திரையுலகம்.. வேறலெவலில் நடைபெற்ற வரலட்சுமி திருமண ரிசப்ஷன்..!

 

நடிகை வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் தம்பதிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, மாரி-2, கன்னிராசி, பாம்பன், நீயா-2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி-2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து அவர்களின் திருமணம் சென்னையில் நேற்று (ஜூலை 3) காலை நடைபெற்றது. தொடர்ந்து மாலை திருமண வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில், சரத்குமார் மகள் வரலட்சுமி - நிகோலாய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். முதல்வருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  

அதேபோல பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், தென் இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.