‘டெஸ்ட்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

 

நடிகை மீரா ஜாஸ்மின் நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

2010-ல் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப் படம்’ மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஓய்நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த். அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில் மண்டேலா படம் தேசிய விருது பெற்றது.

தற்போது தனது 23வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீகோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.