வரலாற்றில் முதன்முறையாக போட்டோ சூட்... விவகாரத்தை கொண்டாடிய பிரபல நடிகை..!

 

நடிகை ஷாலினி தனக்கு விவகாரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. அதற்குப் பின் இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மேலும், இவர் சிறந்த டான்ஸரும் ஆவார். சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய மகள் ரியாவுடன் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவரும் இவருடைய மகளும் செய்த சேட்டைகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்த நிலையில் நடிகை ஷாலினிக்கு விவாகரத்து ஆகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வருகிறது. ஏற்கனவே ஷாலினிக்கு மேட்ரிமனி மூலம் வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தார்கள். ஆனால், திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார்கள். 

அதற்குப் பிறகுதான் ரியாஸ் என்பவருடன் ஷாலினிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. விவாகரத்துக்கு பிறகு ஷாலினி தனியாக வாழ்ந்திருந்தார். அப்போது தான் ரசிகர் என்ற பெயரில் ரியாஸ் ஷாலினியிடம் நெருங்கி பழகியிருக்கிறார். மேலும், இருவரும் காதலிக்கும் செய்தியை வெளிப்படையாக அறிவித்திருந்தார்கள்.

அப்போதே ரியாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் மனைவியை விட்டு பிரிந்து இருக்கிறார் என்றும் ஷாலினி கூறியிருந்தார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின் ஷாலினி கர்ப்பமாக இருந்தார். இதனை அடுத்து இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், ரியாஸ் தன்னை பலமுறை அடித்து துன்புறுத்தியதாக ஷாலினி கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ரியாசுக்கு வேறு சில பெண்களோடு தொடர்பில் இருந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஷாலினி பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஷாலினி போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். பின் அந்த புகைப்படத்தை பதிவிட்டு அதில் அவர், மோசமான திருமணத்தை விட்டு விலகுவது பரவாயில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். அந்த மகிழ்ச்சி ஒருபோதும் குறையாமல் இருக்க உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தேவையான மாற்றங்களை செய்யுங்கள்.

A post shared by shalini (@shalu2626)

விவாகரத்து ஒரு தோல்வி அல்ல. இது உங்களுக்கு ஒரு திருப்புமுனை. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழி வகுத்தது. திருமணத்தை விட்டு விலகி தனிமையில் நிற்பதற்கு அதிக தைரியம் தேவை. அதனால் வெளியில் இருக்கும் துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை அர்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். 

தற்போது இவரின் விவாகரத்து போட்டோசூட் புகைப்படம் பார்த்து பலரும் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் முதல் முறையாக இவர்தான் விவாகரத்து பெற்றதை போட்டோ சூட் எடுத்தவர் என்ற பெருமையும் பெற்று இருக்கிறார்.