பிரபல நடிகருக்கு பெண் குழந்தை.. குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
பிரபல நடிகர் ஷார்வானந்த் தனக்கு பெண் குழந்நை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
2009-ல் வெளியான ‘காதல்னா சும்மா இல்ல’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஷர்வானந்த். அதனைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் ஷார்வானந்த் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படம் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்தது.
தொடர்ந்து சேரனின் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ போன்ற சில தமிழ் படங்களில் ஷர்வானந்த் நடித்திருந்தார். கடைசியாக ஷர்வானந்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவான ‘கணம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் எந்த பின்புலமும் இல்லாமல் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் ஷர்வானந்த்.
இந்த நிலையில் நடிகர் ஷர்வானந்த் கடந்த ஆண்டு, ஜூன் 3-ம் தேதி ரக்ஷிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா அரண்மனையில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் ராம்சரண் உள்ளிட்ட ஏராளமான தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை, முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை ஷர்வானந்த் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்களின் செல்ல தேவதைக்கு லீலா தேவி மைனி என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஷர்வானந்துக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
A post shared by Sharwanand (@imsharwanand)
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரக்ஷிதா ரெட்டி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த விஷயம் குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வந்த ஷர்வானந்த், தன்னுடைய பிறந்தநாளில் குழந்தை பிறந்த தகவலை அறிவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.