48 வயதில் நடிகை கர்ப்பம்.. முதல் குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து!
பிரபல நடிகை ஷர்மிலி 48 வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
90-களில் தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் வலம் வந்தவர் ஷர்மிலி. தனது சினிமா வாழ்க்கையை குழுக்களில் நடனமாடும் நடனக்கலைஞராக ஆரம்பித்த இவர் அடுத்து மெல்ல மெல்ல கேமரா முன் வந்துவிட்டார். இவர், கவுண்டமணியுடன் 27 படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, விவேக், வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள ஷர்மிலி, பிரபல இணையதளத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது 48 வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எல்லாரும் நினைப்பாங்க, ‘ஷர்மிலிக்கு இந்த வயசுல இது தேவையா?’ என்று. நீங்கள் எல்லாம் பெத்துட்டீங்க, அதுங்களும் வளர்ந்துடுசு்சு, நான் என்ன பண்றது? அப்போ பெத்திருந்தால் கூட எப்படி காப்பாற்றியிருப்போம் என்று கூட எனக்கு தெரிந்திருக்காது. இப்போது கர்ப்பமாக இருப்பது, குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்கிற நம்பிக்கையை தந்துள்ளது. இப்போ தான் எனக்கு மெச்சூரிட்டி வந்திருக்கு. பருவத்தில் நான் குழந்தை பெற்றிருந்தால், இந்நேரம் என் குழந்தை கல்லூரி சென்றிருக்கும். கடவுள் எனக்கு வாழ்க்கையை தாமதமாகத் தான் கொடுத்தார்.
40க்கு மேலே தான் எனக்கு வாழ்க்கையை கடவுள் கொடுத்தார். குழந்தையையும் 40க்கு மேல் தான் கொடுத்துள்ளார். எல்லாமே தாமதம் தான். குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறேன். என் கணவர் அர்விந்த் ஐடியில் வேலை செய்கிறார். அவர் படித்துக் கொண்டே இருக்கிறார். நான் இப்போது சினிமாவில் இல்லை. சீரியலில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிக்கலாம், ஆனால் அடுத்த ஆண்டு தான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் ராமநாதபுரத்தில் இருக்கிறேன். குடும்பத்தலைவியாக அங்கு தான் வசித்து வருகிறேன்.
நான் ஒரு நேரத்தில் கல்யாணமே வேண்டாம் , ஜாலியா இருக்கலாம் என்று நினைத்தேன். சம்பாதிக்கலாம், சாப்பிடலாம் என்று இருந்தேன். 40 வயதிற்கு மேல் தான் துணை வேண்டும் என்பதே தெரிந்தது. வயதில் எப்போதும் அது தெரியாது. நல்லவானா தான் கிடைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. கிடைக்கும் வாழ்க்கையை நன்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மை மட்டும் நம்பி இருக்கிறவங்க நமக்கு வேண்டாம், நம்மை காப்பாற்றுபவர்கள் கிடைத்தால் போதும். நம் ஊதியத்தை நம்பி அவர்கள் இருக்க கூடாது. சம்பாதிக்கும் நபரைப் பார்த்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
என் கணவர் இதுவரை என் பெயரை கூறி அழைத்தது இல்லை. இருவரும் அம்மு என்று தான் மாறி மாறி அழைத்துக் கொள்வோம். அந்த அளவிற்கு அவர் நாகரீகமானவர். ‘யோவ்.. 20 வருசத்துக்கு முன்னாடி வந்திருக்கலாம்ல.. இவ்வளவு லேட்டா வந்திருக்க?’ என்று கேட்பேன். 13 வயதில் இருந்து சினிமாவில் இருக்கிறேன். இத்தனை வருசத்துக்கு அப்புறம் கர்ப்பமா இருக்கேன். அதனால் தான் கொஞ்சம் கவனமா இருக்கவேண்டும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன். ஒரு வருடம் கழித்து தான் அடுத்து நடிப்பு பற்றி யோசிக்க வேண்டும் என்று பேட்டியில் கூறியுள்ளார்.