வெளியானது தளபதி 68 புதிய அப்டேட்.. விஜய் ரசிகர்களே ரெடியா?
விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் பூஜை தொடர்பான வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படம் குறித்த அப்டேட்களை ரசிகர்கள் கேட்க துவங்கி விட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து உள்ளது. அந்த வகையில், நாளை (அக்டோபர் 24) முதல் தளபதி 68 தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் 2024-ம் ஆண்டு தங்களுக்கான ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ நாளை மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். தெரிவித்துள்ளது. இந்த வீடியோவிலேயே படக்குழு மற்றும் நடிகர்கள் யார் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று தெரிவித்து இருக்கிறது.