நடிகை சமந்தாவுக்கு கோயில்... நாளை திறப்பு விழா.. எங்கு தெரியுமா?

 

நடிகை சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் ஆந்திராவில் கோவில் கட்டி உள்ளார்.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த தெனாலி சந்தீப் எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோவில் கட்டி வருகிறார். இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து சந்தீப் கூறுகையில், “சம்ந்தா பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோவில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோவில் கட்டி வருகிறேன். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடைபெறுகிறது” என்றார்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தென் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் நினைவுச் சின்னங்களை எழுப்பும் வழக்கத்தின் ஒரு பகுதியாக குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில்கள் கட்டி உள்ளனர்.