சூர்யா பட நாயகியின் முகத்தை தனது கையில் டாட்டூவாக்கிய காதலன்.. வைரல் வீடியோ

 

‘கங்குவா’ படத்தின் நாயகி திஷா பதானியின் முகத்தை அவரது காதலன் தனது கையில் பெரிதாக டாட்டூவாக வரைந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகிய உள்ள ‘கங்குவா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட் நாயகி திஷா பதானி. இவர் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராபை காதலித்து வந்தார். ஆனால், இப்போது இருவரும் பிரேக்கப் செய்த நிலையில் வெளிநாட்டு மாடலான அலெக்ஸாண்டர் என்பவரை டேட் செய்து வருகிறார் திஷா.

தனது தோழி மற்றும் அலெக்ஸாண்டருடன் சமீபத்தில் வெளியே சென்றிருக்கிறார் திஷா. அது தொடர்பான வீடியோ வெளியான போது அலெக்ஸ் கையில் இருந்த டாட்டூ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது ‘திஷாவின் டாட்டூவா?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.