கதையின் நாயகன் சூரியின் அடுத்தப் படம்!

 

நகைச்சுவை நடிகராக தொடங்கி, குணச்சித்திர வேடங்களிலும் அசத்திய சூரி, வெற்றிமாறன் கண்பார்வையில் கதாநாயகனாக உயர்ந்தார். விடுதலை 1, 2 பாகங்களுக்குப் பிறகு சூரியின் நடிப்புத் திறமை அனைத்து வகையிலும் வெளிப்பட்டது.  சூரியின் நடிப்பில் வெளியான கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு,  மாமன் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

சூரியுடன்  ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விலங்கு’ வெப்சீரிஸ் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள படம் மாமன். கருடன்’ படத்தை தயாரித்தே குமார் இந்தப்படத்தையும் தயாரித்துள்ளார்.