சிவகார்த்திகேயனின் மதராஸி... எப்ப வெளியீடு தெரியுமா?

 

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் ‘மதராஸி’. இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தீபாவளி வெளியீடாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே வெளியாக இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் படம் ரம்ஜானுக்கு வெளியாகிவிட்டதால், முழுமையாக ‘மதராஸி’ படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் மதராஸி படத்திற்கு   அனிருத் இசையமைக்கிறார்.