திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்.. வைரல் வீடியோ!

 

சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே23 படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில், திருசெந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை ஈர்த்து, பலரது நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளார். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விலகும் இவர் அடுத்து இயக்குநராகவும் களமிறங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதற்கு முன்னதாக வெளியான மாவீரனும் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்த கையோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சிவாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை பரிசளிக்கும். ஏனெனில் ரங்கூன் படத்தின் மூலமே ராஜ்குமார் பெரியசாமி தான் ஒரு நல்ல இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார்.

இதற்கிடையே சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. அவர் எடுத்த படங்கள் அத்தனையும் அட்டர் ப்ளாப் ஆகின. அவரது நிலைமையை பார்த்த ரசிகர்கள், அட நம்ம முருகதாஸுக்கா இந்த நிலைமை என பரிதாபத்தில் உச் கொட்டுகிறார்கள். எனவே இப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுக்க முருகதாஸ் காத்திருக்கிறார்.

தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.